''தலையை துண்டியுங்கள்..'' : ரஷ்யா பிறப்பித்த பயங்கரமான உத்தரவு


ரஷ்யா தன் படைவீரர்களுக்கு பயங்கரமான உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு ஆதாரமாக அச்சத்தை ஏற்படுத்தும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

 ரஷ்யப் படைவீரர்கள், தங்களிடம் சிக்கும் உக்ரேன் வீரர்களின் தலைகளை வெட்டி, அவற்றை தங்கள் கவச வாகனங்கள் மீது வைக்குமாறு அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு ஆதாரமாக, டொனெட்ஸ்க் பகுதியில், ரஷ்ய கவச வாகனம் ஒன்றின் மீது, உக்ரேன் வீரருடையது என கருதப்படும், வெட்டப்பட்ட தலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ட்ரோன் ஒன்றின் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எண்ட்ரி கோஸ்டின் என்னும் உக்ரைன் அதிகாரி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வோல்னோவாகா மாகாணத்தில் முகாமிட்டிருக்கும் ரஷ்ய படைப்பிரிவொன்றின் தளபதிகள் இந்த பயங்கரமான உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது, தங்களிடம் சிக்கும் உக்ரேன் வீரர்களை போர்க்கைதிகளாக பிடித்துவராமல், அதற்கு பதிலாக அவர்கள் தலைகளைத் துண்டிக்க ரஷ்யப் படைவீரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.